அஜித் தன் அடுத்த படத்திற்கு போட்ட புது டீல் என்ன தெரியுமா ?
Jul 31, 2025, 08:00 IST
அஜித் நடிக்க உள்ள ஏகே 64 படத்தை இயக்க பல இயக்குனர்கள் போட்டிபோட்டாலும் அந்த வாய்ப்பை தட்டி தூக்கியது ஆதிக் ரவிச்சந்திரன் தான். குட் பேட் அக்லி படத்தில் பணியாற்றியபோதே ஆதிக்கின் ஒர்க்கிங் ஸ்டைல் அஜித்துக்கு பிடித்துப் போக, அவரையே தன்னுடைய அடுத்த படத்தை இயக்க சொல்லி இருக்கிறார் அஜித். தற்போது ஏகே 64 படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. அப்படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக கேஜிஎஃப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. இப்படத்திற்கும் ஜிவி பிரகாஷ் குமார் தான் இசையமைப்பார் என கூறப்படுகிறது.
அதன்படிதயாரிப்பாளர் ராகுல் அஜித்திடம் ஒரு செம டீல் போட்டிருக்கிறாராம். அதன்படி இப்படத்தில் நடிக்க அஜித்துக்கு சம்பளம் தராமல், இதன் ஓடிடி மற்றும் டிஜிட்டர் உரிமையை விற்பனை செய்வதன் மூலம் வரும் தொகை முழுவதையும் அஜித்துக்கே வழங்க முடிவெடுத்துள்ளாராம். ராகுல் தியேட்டர் மூலம் கிடைக்கும் வருமானத்தை எடுத்துக்கொள்ள திட்டமிட்டுள்ளாராம். நடிகர் அஜித் சம்பளமே வாங்காமல் புது டீல் போட்டு நடிப்பது இதுவே முதன்முறை ஆகும். ஏகே 64 திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற நவம்பர் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவும் ஒரு கேங்ஸ்டர் படமாக உருவாக அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.