☰
×

அஜித் நடிக்கும் ‘டேர்டெவில்’ (Dare Devil) திரைப்படம்-எப்போது ஷூட்டிங் தெரியுமா ?

 

ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் அஜித் நடிக்கும் ‘டேர்டெவில்’ (Dare Devil) திரைப்படம், நவம்பர் 2 ஆம் தேதி முதல் படப்பிடிக்கத் தொடங்குகிறது. தன் மனைவி ஷாலினியின் ‘பிரேவ் ஹார்ட்ஸ் புரடக்ஷன்ஸ்’ (Brave Hearts Productions) மூலம் இப்படத்தை தயாரிப்பதால், கோலிவுட்டில் தற்போது தயாரிப்பு உத்திகள் மற்றும் பட்ஜெட் கணக்கீடுகள் குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஷாலினி இப்படத்தில் ஒரு சிறப்புத் தோற்றத்தில் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தனது மனைவி தயாரிப்பு என்பதால் வீண் செலவுகளைத் தவிர்க்கவும், நஷ்டமே இல்லாத வணிகத் திட்டத்தைச் செயல்படுத்தவும் அஜித் தரப்பில் கண்டிப்பான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
த்ரிஷா, நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் நடிக்கப் போட்டியிட்டாலும், அதிக சம்பளம் கேட்பவர்களைத் தவிர்த்துவிட்டுப் படக்குழு பட்ஜெட்டுக்குள்ளlயே முன்னணி முகங்களைத் தேடி வருகிறது. படத்தில் இரண்டு ஹீரோயின்கள் நடிக்க அதிக வாய்ப்பு என தகவல் வெளியாகியுள்ளது.