×

#Ajith இணையத்தில் ட்ரெண்டாகும் அஜித்தின் புகைப்படம்.. பதறிப்போன லைக்கா!

 

லைக்கா ப்ரொடக்ஷன் தயாரிப்பில் அஜித் நடிக்கும் விடாமுயற்சியின் படப்பிடிப்பு ஆரம்பம் முதலே ஏதாவது ஒரு பிரச்சனையால் தள்ளிக் கொண்டே போகிறது..

முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த திரைப்படத்தை மகிழ் திருமேனி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.
மகிழ் திருமேனி இயக்குநராக அறிவிக்கப்பட்ட சில நாட்களிலேயே படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அஜித்குமார் பல இடங்களுக்கு தனது பைக் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார்.
அதன் பிறகு ஒரு வழியாக அஜர்பைஜானில் படப்பிடிப்பினை ஆரம்பித்து கிட்டத்தட்ட முக்கால்வாசி படப்பிடிப்பை நிறைவு செய்தனர். 
35 நாட்கள் மட்டுமே ஷூட்டிங் என்று கடந்த மாதம் மீண்டும் அஜர்பைஜான் சென்றனர். ஆனால் அங்கு வானிலை சரியாக இல்லாததால் உடனடியாக திரும்பினர்.
மீண்டும் படப்பிடிப்பினை தொடங்கலாம் என முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தது லைக்கா.
 இதனிடையே வழக்கமான மருத்துவ பரிசோதனையை மேற்கொண்டார் நடிகர் அஜித். அப்பொழுது அவரது காதின் கீழே கட்டி இருந்ததாகவும், அதனை அகற்ற உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருந்தார்.
மருத்துவர்களின் ஆலோசனைப்படி சிறிது நாட்கள் ஓய்வில் இருந்தார் நடிகர் அஜித்.
 மீண்டும் படப்பிடிப்பை தொடங்கலாம் என்று ஏற்பாடுகளை செய்து வந்த லைக்கா நிறுவனம் இன்று வெளியாகி இணையத்தில் ட்ரெண்டான அஜித்தின் புகைப்படத்தை பார்த்து பதறிப் போய் உள்ளது. 
ஓய்வில் இருந்த நடிகர் அஜித்குமார் மீண்டும் மத்திய பிரதேசத்திற்கு ஒரு சிறிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
அங்கு எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் தான் இன்று இணையத்தில் வைரலாகி உள்ளது.
இந்த சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு வந்து எப்பொழுது படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று லைக்கா நிறுவனம் காத்துக் கொண்டிருக்கிறது.
லைக்கா நிறுவனம் மட்டுமல்ல நடிகர் அஜித்தின் ரசிகர்களும் படம் எப்பொழுது வெளியாகும் என்று அடுத்தடுத்த அப்டேட்டுகளுக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இன்று இணையத்தில் வெளியாகி ட்ரெனட் ஆகி வரும் அஜித்தின் புகைப்படம்