☰
×

விளம்பரத்தில் நடிக்க அஜித் வாங்கிய சம்பளம் எத்தனை கோடி தெரியுமா ?

 

 நடிகர் அஜித்குமார் சமீபத்தில் நடித்துள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் விளம்பரம் தொடர்பாக அவரது சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த விளம்பரத்திற்காக அஜித்துக்கு ரூ.40 கோடி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அஜித் குமார் கடந்த சில ஆண்டுகளாக கார் ரேஸிங்கில் முழு கவனம் செலுத்தி வருகிறார். மலேசியா , துபாய் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற கார் பந்தையங்களில் அஜித் தனது அணியுடன் கலந்துகொண்டு சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.

பல வருடங்களுக்குப் பின் ரேஸிங் களத்தில் இருந்து அஜித் வழங்கும் ஒவ்வொரு பேட்டியும் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை தருகின்றன. திரைப்படங்கள் தவிர்த்து சமீப காலங்களில் அஜித் விளம்பர படங்களிலும் நடிக்கத் தொடங்கியுள்ளார். தனது ரேஸிங் நிறுவனத்தின் ஸ்பான்சரான ஜியோஸ்டாரின் கேம்பா குளிர்பான விளம்பரத்தில் அஜித் நடித்திருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது ரியல் எஸ்டேட் விளம்பரம் ஒன்றில் அஜித் நடித்துள்ளார்

இந்த விளம்பரத்தில் நடிக்க அஜித்திற்கு ரூ 40 கோடி சம்பளமாக வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது . தொகையில் ரூ.20 கோடி முன்பணமாக வழங்கப்பட்டதாகவும், மீதமுள்ள ரூ.20 கோடி விளம்பரம் ஒளிபரப்பான பிறகு வழங்கப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கிறது. இந்த விளம்பரத்தை திரைப்பட இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கியுள்ளார். அவருக்கு ரூ.3 கோடி சம்பளம் வழங்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.