அஜித் சார் ஒரு அல்டிமெட் ஜென்டில்மேன்... நடிகர் பிரசன்னா நெகிழ்ச்சி...!
Apr 10, 2025, 16:25 IST
'குட் பேட் அக்லி' திரைப்படம் வெளியாகி உள்ள நிலையில், அஜித் உடன் நடித்த அனுபவத்தை நடிகர் பிரசன்னா பகிர்ந்துள்ளார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் நேற்று இரவு முதலே திரையரங்குகளில் குவிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, அஜித்துடன் நடித்தது குறித்து அவருடன் பணியாற்றிய நடிகர்கள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து வருகின்றனர். அஜித்துடன் மீண்டும் பணியாற்ற விரும்புவதாக நடிகர் அர்ஜுன் தாஸ் தெரிவித்து இருந்தார்.