×

அஜித்திற்கு வில்லனாகும் ஆக்ஷன் கிங்... மீண்டும் இணையும் ‘மங்காத்தா’ கூட்டணி

 

 அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தில் வில்லனாக பிரபல நடிகர் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

‘துணிவு’ படத்திற்கு பிறகு அஜித்தின் 62வது படமாக உருவாகிறது ‘விடாமுயற்சி’. லைக்கா தயாரிப்பில் பிரம்மாண்டமாக தயாராகும் இந்த படத்தின் அறிவிப்பு கடந்த மே மாதமே அறிவிக்கப்பட்ட போதிலும் இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை. அதனால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். 

‘தடம்’, ‘கலகத்தலைவன்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்கவுள்ளார். அனிரூத் இசையில் உருவாகும் இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த படத்தில் நடிகர் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தில் அஜித்திற்கு வில்லனாக நடிகர் அர்ஜூன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக ‘மங்காத்தா’ படத்தில் அஜித்துடன் அர்ஜூன் இணைந்து நடித்திருந்தார். அந்த கூட்டணி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.