×

மீண்டும் பழைய ரூட்டுக்கு திரும்பும் அஜித்

 

கோலிவுட்டின் முன்னணி நடிகராக வரும் அஜித் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்திலும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் நடித்து வருகிறார். இதில் விடாமுயற்சி படம் இன்னும் சில மாதங்களில் வெளியாகும் என கூறப்படுகிறது. ‘குட் பேட் அக்லி’ படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சினிமாவை தாண்டி பைக் மற்றும் கார் ரேசிங்கில் ஆர்வம் கொண்ட அஜித், அதிலும் நேரம் கிடைக்கும் போது கவனம் செலுத்தி வருகிறார். விடாமுயற்சி படம் தொடங்குவதற்கு முன் தனது பைக்கில் உலக சுற்றுலா பயணம் மேற்கொண்டார் அஜித். அதில் முதற்கட்ட பயணத்தை முடித்த அவர் அடுத்தகட்ட பயணத்தை தொடங்குவார் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் அது குறித்து பின்பு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இதையடுத்து வீனஸ் மோட்டர் சைக்கிள்ஸ் டூர்ஸ் என்ற பெயரில் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அண்மையில் கூட இரண்டு விலையுர்ந்த கார்களை வாங்கியிருந்தார்.


இந்த நிலையில் அஜித் தற்போது மீண்டும் கார் ரேசில் பங்கேற்கவுள்ளதாக அவரது நண்பர் மற்றும் கார் பந்தய வீரர் நரேன் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், “2025 ஆம் ஆண்டு மோட்டார்ஸ் போர்ட்ஸ் ஜிடி ரேசிங் பிரிவில் நண்பர் அஜித் கலந்து கொள்வதற்காக கடுமையாக உழைத்து வருவதாக தெரிய வந்துள்ளது. அவர் உண்மையிலேயே ஒரு ஜாம்வான். சிறந்த நடிகரும் கூட. கார் பந்தயத்தில் போட்டியிட்ட அதிக அனுபவம் அவருக்கு இல்லை. தாமதமாக தனது பயணத்தை தொடங்குகிறார். இருப்பினும் சிறந்த கார் ரேசராக விரைவில் ஆவார். அவர் 2010 இல் FIA F2 இல் ஓட்டியது எனக்கு நினைவிருக்கிறது. அவர் ரொம்ப திறமையானவர். அற்புதமான மனிதரும் கூட” எனக் குறிப்பிட்டுள்ளார். 


அஜித் 2003ஆம் ஆண்டு ஃபார்முலா ஆசிய பிஎம்டபள்யூ சேம்பியன்ஷிப், 2010ல் ஃபார்முலா 2 சேம்பியன்ஷிப் உள்ளிட சில போட்டிகளில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.