×

அஜர்பைஜான் கிளம்பிய அஜித், த்ரிஷா... விடாமுயற்சி படப்பிடிப்புக்காக பறந்தது படக்குழு...

 

‘தடம்’, ‘கலகத்தலைவன்’ ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடிக்கவுள்ள திரைப்படம் ‘விடாமுயற்சி’. லைக்கா தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கான அறிவிப்பு கடந்த மே 1-ஆம் தேதி வெளியானது. அனிரூத் இந்த படத்திற்கு இசையமைப்பார் என்று அறிவிக்கப்பட்டது. 

கடந்த சில மாதங்களாக இந்த படத்தின் ப்ரீ பிரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்னும் படப்பிடிப்பு தொடங்கவில்லை. அதேநேரம் அஜித்தும் தனது பைக் பயணத்தை தொடங்கி சென்றுக் கொண்டிருந்தார். அதனால் படத்தை லைக்கா கைவிடவுள்ளதாக தகவல் வெளியானது. 

இதைத்தொடர்ந்து, பைக் பயணம் முடிந்து நடிகர் அஜித் சென்னை திரும்பினார். சிறிய இடைவௌிக்கு பின்னர் தற்போது அஜித், த்ரிஷா உள்பட படக்குழுவினர் அனைவரும் அஜர்பைஜான் பறந்துள்ளனர். அங்கு படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.