தல ரசிகர்களுக்கு செம ட்ரீட்: ஏவிஎம் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தில் அஜித் பயன்படுத்திய பைக்.
நடிகர் அஜித் படத்தில் பயன்படுத்திய பைக்கை ஏவிஏம் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தில் வைத்துள்ளதாக அந்நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அஜித் தற்போது ‘விடாமுயற்சி’ படத்திற்காக இயக்குநர் மகிழ்திருமேனியுடன் கைகோர்த்துள்ளார். அப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. அஜித் பைக் காதலர் என நாம் அனைவருக்கும் தெரியும் சமீபத்தில் கூட பைக்கில் உலக சுற்றுபயணம் சென்றிருந்தார். இந்த நிலையில் கடந்த 2006ஆம் ஆண்டு இயக்குநர் பேரரசு இயக்கத்தில் அஜித் நடித்த ‘திருப்பதி’ படத்தில் அவர் பயன்படுத்திய பஜாஜ் பல்சர் 180சிசி -2004அம் ஆண்டு மாடல் பைக் ஏவிஎம் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தில் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனை அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதனுடன் பைக்கில் அஜித் பயணிக்கும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.
இந்த தகவல் அஜித் ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக அமைந்துள்ளது. இந்த ஏவிஎம் ஹெரிடேஜ் அருங்காட்சியகத்தில் தமிழ் சினிமாவில் 1960 முதல் சினிமாவில் பயன்படுத்தப்பட்ட பைக், கார், சினிமா தொடர்பான பெருட்கள் மக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.