கார் ரேஸில் பெற்ற கோப்பைகளுடன் அஜித்... புகைப்படம் வைரல்...!
Apr 23, 2025, 18:18 IST
கார் ரேஸில் பெற்ற கோப்பைகளுடன் நடிகர் அஜித் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
திரைத்துறையைத் தாண்டி கார் ரேஸில் ஆர்வமுள்ள அஜித் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கார் ரேஸுக்கு திரும்பியுள்ளார். இதற்காக அஜித்குமார் ரேஸிங் என்ற புதிய கார் ரேஸ் அணியை உருவாக்கி கடந்த ஜனவரி முதல் 24ஹெச் துபாய் 2025, ஐரோப்பியன் 24ஹெச், போர்சே 992 ஜிடி3 உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்த போட்டிகளில் அஜித்தின் அணி தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. துபாயில் நடந்த 24ஹெச் சீரிஸில் 911 ஜிடி3 ஆர் பிரிவில் மூன்றாவது இடத்தை பிடித்தது. பின்பு இத்தாலியில் நடைபெற்ற கார் பந்தயத்திலும், அஜித் அணி 3 ஆவது இடம் பிடித்தது. இதையடுத்து சமீபத்தில் பெல்ஜியம்மில் நடைபெற்ற ஒரு கார் பந்தயத்தில் இரண்டாவது இடத்தை பிடித்தது.