☰
×

 ‘டேர் டெவில்’ படத்தில் அஜித்துடன் நடிக்கும் பார்த்திபன் -ஹீரோயின் யார் தெரியுமா ?

 

நீண்ட நாட்களாக கார் ரேஸில் கவனம் செலுத்தி வந்த அஜித் குமார், ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்கும் ‘டேர் டெவில்’ என்ற படத்தில் நடிக்கிறார். பிரேவ்ஹார்ட் நிறுவனத்துக்காக ஷாலினி அஜித் குமார் தயாரிக்கும் இப்படத்துக்கான தொடக்க விழா  நடந்தது. . இந்நிலையில், முக்கிய வேடத்தில் நடிக்கும் பார்த்திபன் வெளியிட்டுள்ள பதிவில், ‘ ‘டேர் டெவில்’ படத்தில் 
சிறந்தவரான அஜித் குமாருடன் இணைந்து நடிப்பதிலும், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் பணியாற்றுவதிலும் மிகவும் மகிழ்ச்சி’ என்று குறிப்பிட்டுள்ளார். தவிர ஸ்ரீலீலா, பிரபு, சுனில், உன்னி முகுந்தன், ரெடின் கிங்ஸ்லி நடிக்கின்றனர். அபிநந்தன் ராமானுஜம் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசை அமைக்கிறார். விஜய் வேலுகுட்டி எடிட்டிங் செய்கிறார். அஜித் குமாரின் கார் ரேஸிங் ஆவணப்படமான ‘கிளாடியேட்டர்ஸ்’, நவம்பர் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது பொங்கலுக்கு வெளியாகும் என்று ஆதிக் ரவிச்சந்திரன் அப்டேட் கொடுத்துள்ளார்.