×

அஜித்துடன் இணையும் மாஸ் இசையமைப்பாளர்.. பட்டையை கிளப்பும் ‘ஏகே 62’ அப்டேட் 

 

அஜித்தின் 62-வது படத்தில் பிரபல இசையமைப்பாளர் ஒருவர் இணைந்துள்ளதாக  வெளியாகி உள்ளது. 

'துணிவு' படத்திற்குப் பிறகு நடிகர் அஜித்குமார் அடுத்து யாருடைய இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு நீண்ட நாட்களாக நிலவி வருகிறது. ஏற்கனவே அஜித்தின் 62வது படமாக உருவாகும் இப்படத்தை லைக்கா தயாரிப்பில் விக்னேஷ் சிவன்  இயக்குவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அனிருத் இசையமைப்பார் என்று அதிகாரப்பூர்வமாக கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. 

ஆனால் விக்னேஷ் சிவனின் கதையில் திருப்தியில்லை என்பதால் அஜித் அந்த கதையை நிராகரித்தார். அதனால் படத்திலிருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டார். அதேபோன்று அனிரூத்தும் படத்திலிருந்து விலகியதாக தகவல் வெளியானது. இதனால் அஜித்தை இயக்குவது யார் என்று பல்வேறு தகவல் பரவியது.

இதையடுத்து மகிழ் திருமேனி, வெங்கட் பிரபு, ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோர் அஜித்தின் அடுத்த படத்தை இயக்கும் பட்டியலில் இருந்தனர். இறுதியாக ‘தடம்’, ‘கலகத்தலைவன்’ ஆகிய படங்களை இயக்கிய மகிழ் திருமேனி தான் அஜித்தின் 62வது இயக்குவது உறுதியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் சிவன் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் மூலம் அஜித்தின் படத்திற்கு முதல்முறையாக சந்தோஷ் சிவன் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.