ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்த அஜித்தின் 'விடாமுயற்சி’ ஓடிடி அறிவிப்பு...!
Feb 25, 2025, 12:15 IST
அஜித்குமார் நடிப்பில் வெளியான ’விடாமுயற்சி’ திரைப்படம் மார்ச் 3ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கிய 'விடாமுயற்சி’ படத்தில் அஜித்துடன் திரிஷா, அர்ஜுன், ரெஜினா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார்.அஜார்பைஜானில் படம்பிடிக்கப்பட்ட ’விடாமுயற்சி’ திரைப்படத்தில் பரந்து விரிந்த நிலபரப்பின் காட்சிகள் ரசிகர்களை அதிகம் கவர்ந்தன. தற்போது உலகம் முழுவதும் ’விடாமுயற்சி’ திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், ’விடாமுயற்சி’ திரைப்படம் மார்ச் 3ஆம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.