தந்தையை போல் கார் ரேஸிங்-ல் ஆர்வம் காட்டும் அஜித் மகன் ஆத்விக்... புகைப்படங்கள் வைரல்
May 3, 2025, 16:33 IST
நடிகர் அஜித்குமார், தனது மகனுடன் கார் ரேஸ் பந்தய மைதானத்தில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
தமிழின் முன்னணி நடிகரான அஜித் குமார் கலைத்துறையில் ஆற்றிய சேவையை பாராட்டி அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவாஜி கணேசன், விஜயகாந்த் ஆகியோருக்கு அடுத்தபடியாக பத்ம விருது பெறும் தமிழ் நடிகர் என்கிற பெருமையை அஜித்குமார் பெற்றுள்ளார்.நடிப்பு மட்டுமில்லாமல் ரேசிங்கிலும் அஜித் கவனம் செலுத்தி வருகிறார்.