மீண்டும் தள்ளப்போகும் 'AK 62' அறிவிப்பு... எப்பதான் ஆரம்பிங்க என ஆதங்கப்படும் ரசிகர்கள் !
அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு மேலும் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடும் நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். கடைசியாக அவர் நடிப்பில் வெளியான 'துணிவு' ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில் அடுத்து தனது 62வது படத்தில் நடிக்க உள்ளார். லைக்கா தயாரிக்கும் இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.
அதன்பிறகு அவர் விலகியதை அடுத்து தற்போது மகிழ் திருமேனி இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. அனிரூத் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. கதை இறுதி செய்யப்பட்ட நிலையில் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த மாதம் அறிவிக்கப்பட இருந்த நிலையில் அஜித் தந்தை மறைவால் அடுத்த மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அடுத்த மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு மே மாதத்தில் படப்பிடிப்பை தொடங்க இயக்குனர் மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளார். முதலில் இந்த படத்தை ஆண்டு இறுதிக்குள் வெளியிட திட்டமிட்ட நிலையில் படப்பிடிப்பு தாமதத்தால் அடுத்த ஆண்டு தள்ளிப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.