வெங்கட் பிரபு இயக்கத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்..?

 
venkat prabu

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் வெங்கட் பிரபு. 
கடந்தாண்டு விஜய்யை வைத்து கோட் படத்தை இயக்கினார் வெங்கட்பிரபு. இதன்பின் இவரது அடுத்த படம் பற்றிய எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், சிவகார்த்திகேயன், அக்ஷய் குமார் போன்ற நடிகர்களுடன் வெங்கட் பிரபு பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வந்தன.vp

இந்த நிலையில் வெங்கட் பிரபு ஹிந்தியில் படம் இயக்குவதற்காக சில மாதங்களாக அக்ஷய் குமாருடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். இப்போது அக்ஷய் குமார் இவர் இயக்கத்தில் நடிக்கிறேன் என ஒப்புக்கொண்டாராம். ஆனால் கால்ஷீட் தற்போது இல்லாததால் கைவசம் உள்ள படங்களை முடித்து வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க 10 மாதங்கள் அவகாசம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வெங்கட் பிரபு, அக்ஷய் குமார் கூட்டணி குறித்த அறிவிப்பு வர தாமதம் ஆகும் என சொல்லப்படுகிறது.