×

'புஷ்பா 2' டிரெய்லர் : அல்லு அர்ஜூன் வெளியிட்ட அப்டேட்..!

 

புஷ்பா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் படம் 'புஷ்பா 2'. இப்படத்தில் தேசிய விருது வென்ற நடிகர் அல்லு அர்ஜுன் சந்தன கடத்தல்காரர் புஷ்பா ராஜாகவும் மற்றும் அவரது மனைவியாக நடிகை ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீ வள்ளி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.  

‘புஷ்பா தி ரூல்’ என்ற தலைப்பில் உருவாகி வரும் இப்படத்தின் முன்னோட்ட வீடியோ மற்றும் ஃபர்ஸ்ட் லுக், கடந்த ஆண்டு அல்லு அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இதையடுத்து இந்தாண்டு பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியாகியிருந்தது. ஃபர்ஸ்ட் லுக்கில் இடம்பெற்ற அதே காளி கெட்டப்பில் படத்தின் டீசரிலும் அல்லு அர்ஜுன் தோன்றியிருந்தார். இதையடுத்து முதல் பாகத்தில் இடம்பெற்ற ஊ அண்டாவா' பாடல் மிகவும் பிரபலமானதை தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் ஒரு குத்து பாடல் இருக்கிறது. இந்தப் பாடலுக்கு தெலுங்கு இளம் நடிகை ஸ்ரீ லீலா நடனமாடியிருக்கிறார்.