×

காந்தாரா பார்த்துவிட்டு அல்லு அர்ஜுன் என்ன சொன்னார் தெரியுமா ?

 
சமீபத்தில் ரிலீஸ் ஆன காந்தாரா சாப்டர் 1 மிகபெரிய வெற்றி பெற்றது .இது வசூலில் சாதனை படைத்தது .இந்த படம் பார்த்து விட்டு பிரபலங்கள் பலர் பாராட்டி வருகின்றனர் .இந்நிலையில் அல்லு அர்ஜுன் அந்த படம் பார்த்துவிட்டு என்ன சொன்னார் என்று நாம் இப்பதிவில் காணலாம் .
 ‘காந்தாரா சாப்டர் 1’ பார்த்துவிட்டு அல்லு அர்ஜுன் கூறும்போது, “நேற்றிரவு ‘காந்தாரா’ பார்த்தேன். வாவ், மனதைப் பறிக்கும் என்ன ஒரு படம். அதைப் பார்க்கும் போது நான் ஒரு மயக்கத்தில் இருந்தேன். ரிஷப் ஷெட்டிக்கு வாழ்த்துகள்.
எழுத்தாளராக, இயக்குனராக, நடிகராக ‘ஒன் மேன் ஷோ’ ஆக ஒவ்வொரு துறையிலும் அவர் சிறந்து விளங்கினார். உண்மையில் அனுபவத்தை விவரிக்க வார்த்தைகள் போதாது. நிறைய அன்பு, போற்றுதல், மரியாதை” என இதில் பணியாற்றிய அனைவரையும் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ளார்.