×

அட்லீ -அல்லு அர்ஜுன் படத்தில் இருவர் சம்பளம் மட்டும்  ரூ.300 கோடி.. ?

 

அல்லு அர்ஜுன் பிறந்த நாளை முன்னிட்டு, அவர் அட்லீ இயக்கத்தில் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் பட்ஜெட் மற்றும் சம்பள விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.  இந்த படத்திற்காக, அல்லு அர்ஜுனுக்கு 200 கோடி ரூபாய், அட்லிக்கு 100 கோடி ரூபாய் சம்பளம் நிர்ணயிக்கப்பட்ட இருப்பதாக கூறப்படுகிறது.மேலும் நாயகி, இசையமைப்பாளர், மற்றும் பிற முக்கிய நட்சத்திரங்களுக்கு மொத்தமாக 50 கோடி ரூபாய் அளவிலான சம்பளம் வழங்கப்பட உள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு மேலாக, இந்த படத்தின் தொழில்நுட்ப பணி மிகப்பெரியதாக இருக்கும் என்பதால், அதற்கும் ஒரு பெரிய தொகை ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.