அல்லு அர்ஜுன் மிரட்டல் நடிப்பில் வெளியானது புஷ்பா 2 ட்ரெய்லர்...!
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் புஷ்பா 2 படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருப்பவர் அல்லு அர்ஜுன். அவர் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் புஷ்பா படத்தில் நடித்தார். அந்தப் படம் பான் இந்திய லெவலில் வெளியாகி சுமார் 500 கோடி ரூபாய் வரை இந்தியா முழுவதும் வசூல் செய்தது. இதன் காரணமாக அவர் பான் இந்தியா ஸ்டாராக மாறினார். அதை தொடர்ந்து முதல் பாகத்தின் பிரமாண்ட வெற்றியை அடுத்து படத்தின் இரண்டாவது பாகம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி படத்தின் ஷூட்டிங்கும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மும்முரமாக நடந்தது. கடந்த வருடம் படத்திலிருந்து க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகின. அதில் இரவில் அல்லு அர்ஜுன் வருவது போன்றும், அவரது வருகையை மக்கள் கொண்டாடுவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதனைப் பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டடிக்கும் என்று உறுதியாக நம்பிக்கொண்டிருக்கின்றனர்.
இதற்கிடையே சில மாதங்களுக்கு முன்பு அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. அது மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. அதனையடுத்து படத்திலிருந்து மொத்தம் இதுவரை இரண்டு பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. அந்தப் பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்திருக்கின்றன. இதன் காரணமாக அல்லு அர்ஜுனின் ரசிகர்கள் ஹேப்பி மோடில் இருக்கிறார்கள்
இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று மாலை ட்ரெய்லர் ரிலீஸாகியிருக்கிறது. ட்ரெய்லரில் அல்லு அர்ஜுன் மிக அருமையாக இருக்கிறார் என்றும், கண்டிப்பாக புஷ்பா படத்தின் முதல் பாகம் போலவே இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றும் என்றும் ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். மேலும் இந்த ட்ரெய்லர் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.