×

அடுத்த படத்தில் நவீன் பொலிஷெட்டியை இயக்குகிறேனா...?  மணிரத்னம் மறுப்பு
 

 

தனது அடுத்த படத்தில் நவீன் பொலிஷெட்டியை இயக்கவில்லை என இயக்குனர் மணிரத்னம் தெரிவித்துள்ளார். 


கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தை இயக்கியுள்ளார் மணிரத்னம். ஜூன் 5-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உள்ளது. இதையடுத்து தெலுங்கு நடிகர் நவீன் பொலிஷெட்டி நடிக்கும் படத்தை மணிரத்னம் இயக்க இருப்பதாகச் செய்திகள் வெளியானது.

இதில் ருக்மணி வசந்த் நாயகியாகவும் அது காதல் கதையைக் கொண்ட படம் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் ஒரு நேர்காணலில் இதுகுறித்து மணிரத்னத்திடம் கேட்டபோது, ”அடுத்து படம் பண்ணுகிறேன். ஆனால் இது இல்லை. சில கதைகளில் பணியாற்றி வருகிறேன். எந்த கதையைத் தொடங்குவோம் என்று தெரியவில்லை. இன்று நடக்கும் என்பது நாளை மாறலாம்” என தெரிவித்தார்.