×

"அமரன்": 3 பேருக்கு தேசிய விருது கிடைக்கும் - இயக்குநர் பொன்ராம்  புகழாரம் 
 

 
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை சாய் பல்லவி கூட்டணியில் உருவான படம் "அமரன்." கடந்த தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியான "அமரன்" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. மேலும், வசூலையும் வாரி குவித்து வருகிறது. ரசிகர்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் பலர் "அமரன்" படத்திற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இயக்குநர் பொன்ராம் "அமரன்" படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், "அமரன் சிவகார்த்திகேயன் சார், இது உங்களின் அடுத்த மைல்கல். கடின உழைப்புக்காக சிவகார்த்திகேயன், ராஜ்குமார் பெரியசாமி மற்றும் சாய் பல்லவி மற்றும் அமரன் படக்குழுவுக்கு தேசிய விருது கிடைக்கும்" என குறிப்பிட்டுள்ளார். "அமரன்" படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். சாய் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்ள, கலைவாணன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தை நடிகர் கமல் ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்துள்ளது.