×

அமரன் : 10 நாட்களில் ரூ.200 கோடி வசூல் சாதனை...  

 
நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி நடித்த, 'அமரன்' திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது. மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாரிக்கபபட்டுள்ள இப்படத்தில், முகுந்த் வரதராஜன் கதாபாத்திரத்தில் சிவகார்த்திகேயனும், முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா கதாபாத்திரத்தில், சாய் பல்லவியும் நடித்துள்ளனர். ரசிகர்களின் மத்தியில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்று வரும் இப்படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது. உலகளவில் சுமார் 900-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான அமரன் சுமார் ரூ.170 கோடி வரை வசூலித்து இருந்த நிலையில் தற்பொழுது திரைப்படம் உலகளவில் 200 கோடி ரூபாயை கடந்துள்ளது. இப்படமே சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களில் அதிகம் வசூலித்த திரைப்படமாகும். இத்திரைப்படம் 10 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.வரும் நாட்களில் இன்னும் அதிகளவு வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.