அமரன் படத்தின் "உயிரே" பாடலின் லிரிக் வீடியோ ரிலீஸ்
Oct 30, 2024, 19:20 IST
இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அமரன்'. கமல்ஹாசனின் ராஜ்கமல் புரொடக்ஷன் தயாரிக்கும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படத்தில் சிவகார்த்திகேயன் 'முகுந்தன்' என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். புவன் அரோரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். உண்மை சம்பவத்தின் தழுவலை கொண்டுள்ள இப்படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் டிரைலரை நடிகரும், தயாரிப்பாளருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ளார். முன்னதாக இந்தப் படத்தின் முதல் பாடல் 'ஹே மின்னலே' ஏற்கனவே வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், 'அமரன்' படத்தின் 'உயிரே' பாடல் லிரிக் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.