‘நான் ஏன் ஓய்வுபெற வேண்டும்?’ -அமிதாப் பச்சன் கேள்வி
இந்திய திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான அமிதாப் பச்சன், தனது ஓய்வு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ‘நான் ஏன் ஓய்வுபெற வேண்டும்?’ என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். சமீபத்தில் ஊடக நேர்காணல் ஒன்றில் பேசும்போது, ‘நான் ஏன் எனது பணியை கைவிடுவதை பற்றி யோசிக்க வேண்டும்? மக்கள் ஏன் என்னை எனது வேலையில் இருந்து ஓய்வுபெறச் செய்ய இவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள்?’ என்று கேள்வி எழுப்பினார். இந்த விவகாரத்தின் பின்னணி மற்றும் அவரது விளக்கம் தற்போது வெளியாகியுள்ளது.
அமிதாப் பச்சன் தனது வலைப்பதிவில் (பிளாக்) நள்ளிரவில் ஒரு பதிவை எழுதும்போது மிகவும் தாமதமாகிவிட்டதால், ‘நேரமாகிவிட்டது. இனி ஓய்வுபெற வேண்டியதுதான்’ (It’s late, time to retire) என்று குறிப்பிட்டு இருந்தார். ஆங்கிலத்தில் ‘Retire’ என்ற வார்த்தையை பதிவிடுவது, படுக்கைக்கு செல்வது என்ற அர்த்தத்திலும் புரிந்துகொள்ளலாம். ஆனால், அவரது ரசிகர்களும், ஊடகங்களும், திரையுலகில் இருந்து அமிதாப் பச்சன் ஒட்டுமொத்தமாக ஓய்வுபெற போகிறார் என்று தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. இதையடுத்து வெவ்வேறு யூகங்களை வலைத்தளங்களில் பதிவு செய்ய தொடங்கினர். இதனாலேயே அவர் இவ்வாறு பதில் கூறியுள்ளார்.