×

பிரபாஸ் படத்தில் நடிக்க அமிதாப் பச்சனுக்கு இத்தன கோடியா!?

பிரபாஸ் படத்தில் நடிப்பதற்காக அமிதாப் பச்சன் பெரும் தொகையை சம்பளமாக பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. பிரபாஸ் தற்போதுராதாகிருஷ்ணன் இயக்கத்தில் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. அதையடுத்து, ‘மஹாநடி’ படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில், பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இப்படத்தின்
 

பிரபாஸ் படத்தில் நடிப்பதற்காக அமிதாப் பச்சன் பெரும் தொகையை சம்பளமாக பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரபாஸ் தற்போதுராதாகிருஷ்ணன் இயக்கத்தில் ‘ராதே ஷ்யாம்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

அதையடுத்து, ‘மஹாநடி’ படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமான நாக் அஷ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில், பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் பிரபாஸுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இப்படத்தின் மூலம் தீபிகா படுகோன் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகிறார்.



இந்தப் படத்தின் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் நடிக்க அமிதாப் பச்சனுக்கு பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளது. ஆம், இந்தப் படத்தில் நடிக்க அவருக்கு 21 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட இருக்கிறதாம்.

இந்தப் படத்தின் மிக முக்கியமான கதாபாத்திரம் என்பதாலும், ஹிந்தியில் பெரிய மார்க்கெட் கிடைக்கும் என்பதாலும் படக்குழுவினர் அமிதாப் பச்சனை நடிக்க வைப்பதில் உறுதியாக உள்ளனராம்.