"மமிதாவை நான் எப்போதும் வியந்து பார்க்கிறேன்."-இப்படி கூறும் நடிகை யார் தெரியுமா ?
Nov 24, 2026, 07:00 IST
தமிழில் ‘வித் லவ்’ படத்தில் நடித்த அனஸ்வர ராஜன் பேசுகையில், ‘‘எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போன பல தருணங்களில், மமிதா என் பக்கத்திலேயே இருந்து என் கைகளைப் பிடித்துக்கொண்டு எனக்கு மிகப்பெரிய தைரியத்தையும் ஆதரவையும் கொடுத்தார். அவர் கொடுக்கும் அந்த நம்பிக்கையும் ஆறுதலும் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஒரு நல்ல மனிதராகவும், சிறந்த நடிகையாகவும் மமிதாவை நான் எப்போதும் வியந்து பார்க்கிறேன்.
எங்கள் நட்பு வெறும் சினிமா வேலைகளோடு முடிந்துவிடுவதில்லை. அது உண்மையான அன்பிலும் அக்கறையிலும் கட்டமைக்கப்பட்டது’’ என்றவர், ‘‘தொடக்க காலத்தில் மற்ற நடிகைகளோடு ஒப்பிட்டுப் பேசப்பட்டவை என் மனதைப் பாதித்திருக்கலாம். ஆனால், இப்போது இதுபோன்ற ஒப்பீடுகளை நான் ஒரு போட்டியாகப் பார்ப்பதில்லை. இவை எதுவுமே என்னை இப்போது பாதிப்பதும் இல்லை’’ எனப் பேசியிருக்கிறார்.