பெண்ணின் தனி உரிமையையும் மதிக்க வேண்டும் என்ற கருத்தை கூறும் -அங்கம்மாள் விமர்சனம்
Dec 6, 2025, 08:00 IST
கணவரை இழந்த கீதா கைலாசத்தின் மகன்கள் பரணி, சரண். இருவரில் பரணி விவசாயம் செய்கிறார். சரண் டாக்டர் ஆகிறார். பிடிவாத குணம் கொண்ட கீதா கைலாசம், மகன்கள் மற்றும் பரணியின் மனைவி தென்றல் ரகுநாதனை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். அவரை யாரும் எதிர்க்க முடியாது. டவுனில் பணக்கார பெண் முல்லையரசியை சரண் காதலிக்கிறார். பெண் வீட்டார் தனது வீட்டுக்கு வரும்போது, ஜாக்கெட் என்ற மேல்சட்டை அணியாத கீதா கைலாசத்தை மதிப்பு குறைவாக பார்த்துவிட கூடாது என்று அச்சப்படும் சரண், இதை நேரடியாக சொல்ல பயந்து, அண்ணி தென்றல் ரகுநாதன் மூலம் சொல்கிறார். இதனால் குடும்பத்தில் பிரச்னை பூதாகரமாக வெடிக்கிறது. அங்கம்மாள் என்ன செய்கிறார் என்பது மீதி கதை.
சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய ‘கோடித்துணி’ என்ற சிறுகதையை தழுவி உருவான இப்படத்தில், அங்கம்மாளாகவே வாழ்ந்திருக்கிறார் கீதா கைலாசம். அவரது நடிப்புக்கு விருது கிடைக்கும். மேல்சட்டை அணியாமல், சுருட்டு பிடித்தபடி எகத்தாளமாக பேசி கவனத்தை ஈர்த்துள்ளார். ‘வட சென்னை’ சரண், முல்லையரசி ஜோடியின் லவ் கெமிஸ்ட்ரியும், தியேட்டர் ரொமான்ஸும் சூப்பர். ‘நாடோடிகள்’ பரணியும், தென்றல் ரகுநாதனும் கிளைமாக்ஸில் அசத்தியுள்ளனர். கிராமத்து பெண்கள், அங்கம்மாளின் அந்த நாள் நண்பர் வினோத் ஆனந்த் உள்பட அனைவரும் யதார்த்தமாக நடித்துள்ளனர்.