×

பிறந்தநாள் கொண்டாட்டத்தில் தேவதையாக ஜொலிக்கும் அனிகா சுரேந்திரன்!

 

நடிகை அனிகா சுரேந்திரனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன 

மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் பேபி அனிகா. கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ படத்தில் திரிஷாவின் மகளாக நடித்து தமிழில் அறிமுகமானார். அதையடுத்து அவருக்கு தமிழில் ரசிகர்கள் குவிந்தார்கள். 

பின்னர்  ‘விஸ்வாசம்’ படத்திலும் அனிகா அஜித்தின் மகளாக நடித்திருந்தார். 16 வயதே ஆகும் அனிகா பார்ப்பதற்கு ஹீரோயின் போலவே தோற்றமளிக்கிறார். அடுத்து படங்களில் கதாநாயகியாக நடிக்கவும் தொடங்கிவிட்டார். மலையாளத்தில் அன்னா பென், ரோஷன் மெத்தியூ, ஸ்ரீநாத் பாசி ஆகியோர் நடிப்பில் உருவான ‘கப்பேலா’ திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அனிகா கதாநாயகியாக நடிக்கவுள்ளார்.

இன்று அனிகாவின் பிறந்தநாள். அதையடுத்து அனிகா தனது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார். அந்தக் கொண்டாட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அனிகா வெள்ளை உடையில் தேவதை போல ஜொலிக்கிறார்.