×

Porsche காரில் கெத்தாக அமர்ந்த ‘அனிருத்’- இணையத்தை கலக்கும் வீடியோ.

 

இசையமைப்பாளர் அனிருத்தை பாராட்டி காசோலையை தயாரிப்பாளர் கலாநிதி மாறன் பரிசாக வழங்கியதை தொடர்ந்து அவருக்கு Poesche கார் ஒன்றையும் வழங்கியுள்ளார்.

கலாநிதி மாறன் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு BMW காரை பரிசாக வழங்கினார் .அதேப்போல இயக்குநர் நெல்சனுக்கு பெரிய தொகைக்கான காசோலையை வழங்கி Poesche  கார் ஒன்றை பரிசாக வழங்கினார். அந்த வரிசையில் இசையமைப்பாளர் அனிருத்தும் இணைந்துள்ளார். அனிருத்துக்கு காசோலை மற்றும் Poesche காரை வழங்கி பாராட்டியுள்ளார் தயாரிப்பாளர். இது குறித்த விடியோ சன்பிக்சர்ஸ்ஸின் எக்ஸ் பக்கத்தில் அவர்கள் பகிர்ந்துள்ளனர். அதில் காரில் செம கெத்தாக அனிரூத் அமர்கிறார். இதனை பார்த்த ரசிகர்கள் ஹப்பாடா…. ஒரு வழியாக அனிருத்துக்கும் கார் கிடைத்துவிட்டதாக பதிவிட்டு வருகின்றனர்.  

 முதலீட்டை விட மூன்று மடங்கு பணத்தை வசூலாக படம் குவித்துள்ளதை தயாரிப்பு நிறுவனம் கொண்டாடி வருகிறது. மல்டி ஸ்டார் படமாக வெளியான ஜெயிலர் படத்தில் பாடல்கள், மாஸ் காட்சிகள் என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது. ரஜினியின் நடிப்பில் கடைசியாக அண்ணாத்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், ஜெயிலர் மீது அதீத எதிர்பார்ப்பு நிலவியது. அதை ஜெயிலர் பக்காவாக பூர்த்திசெய்துள்ளார்.