×

“ஆர்.ஜே.பாலாஜிக்கு சொர்கவாசல் திருப்புமுனையாக இருக்கும்”- அனிருத்

 

அறிமுக இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்.ஜே பாலாஜி, செல்வராகவன் நடிக்கும் சொர்க்கவாசல் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. விழாவில் படக்குழுவினரும், சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் கலந்து கொண்டு பேசினர். 

இந்நிகழ்ச்சியில் பேசிய அனிருத், “இசையமைப்பாளர் அனிருத் பேசுகையில்,சொர்க்கவாசல்  திரைப்படத்தின் இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் என்னுடைய ஸ்கூல் ஜூனியர். அப்போது அவருக்கு சினிமாவில் ஈடுபாடு இருப்பது எனக்கு தெரியாது. பா.ரஞ்சித்திடம் உதவி இயக்குனராக பணியாற்றி இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்.  முதலில் இந்த கதையைக் கூறும் போது இந்த கதாபாத்திரத்திற்கு யார் சரியாக இருப்பார் என்ற கேள்விக்கு நான் ஆர்.ஜே பாலாஜி இருந்தால் நன்றாக இருக்கும் என்றேன். இந்த திரைப்படத்தை பார்க்கும்போது பெருமையாக இருக்கிறது. 

ஆர்.ஜே. பாலாஜி நான் இசையமைப்பாளராக ஆகுவதற்கு முன்னரே ஆர்.ஜேவாக கொடிகட்டி பறந்தவர். எனக்கு நெருங்கிய நண்பர் என்றால் அது ஆர்.ஜே பாலாஜி. அவரது இந்தப் பயணத்தை பார்த்தால் பெருமையாக இருக்கிறது. ஒரு ஆர்.ஜே வாகா இருந்து சினிமாவுக்குள் வந்து அவர் நடித்த எல்லா திரைப்படங்களும் வணிக ரீதியாக வெற்றி பெற்றிருக்கிறது.  இதுவரை அவரை காமெடியனாக நினைத்துக் கொண்டிருந்தவர் சொர்க்கவாசல் திரைப்படம் திருப்பு முனையாக இருக்கும். படத்தில் பணிபுரிந்த அனைவர்களுக்கும் இந்த திரைப்படம் ஒரு சொர்க்க வாசலாக இருக்கும்” என்றார்.