×

அனிருத் குரலில் `கிஸ்' படத்தின் முதல் பாடல் வெளியீடு 

 

சதிஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள `கிஸ்' படத்தின் முதல் பாடல் வெளியாகி உள்ளது. 

தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ். இவர் முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் கிஸ். டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்துள்ளார். படத்தின் இசையை ஜென் மார்டின் மேற்கொள்கிறார்.