"சூரி தற்போது பல சாதனைகளை படைத்து வருகிறார்."-பாராட்டிய அஞ்சலி
Oct 8, 2026, 08:00 IST
ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி நடித்துள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற படத்தை ,சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் தயாநிதி இசை அமைத்துள்ளனர். அஞ்சலி கூறுகையில், ‘இப்படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதை நினைத்து மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். சூரி எனக்கு நல்ல நண்பர். தற்போது பல சாதனைகளை படைத்து வருகிறார்.
‘மண்டாடி’ படத்தில் சூரி பெற்ற வெற்றியை நான் பெற்ற வெற்றியாக கொண்டாடுகிறேன். எனது முதல் படத்தில் இருந்து நானும், ராமும் பயணித்து வருகிறோம். எனக்கு அவர் ஒரு தந்தையாகவும், வழிகாட்டியாகவும் இருக்கிறார். ‘ஏழு கடல் ஏழு மலை’ படம் அவரது இதயத்துக்கு எவ்வளவு நெருக்கம் என்று தெரியும். அதில் எனது கேரக்டரை அற்புதமாக வடிவமைத்துள்ள அவருக்கு நன்றி.