சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 99வது படம் -மகுடம் படவிழாவில் அஞ்சலி பேச்சு
விஷால் இயக்கி, ஹீரோவாக நடித்துள்ள படம் ‘மகுடம்’. சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 99வது படமான இதில் விஷால் 3 வித்தியாசமான வேடங்களில் நடிக்கிறார். இப்படத்தில் அஞ்சலி, துஷாரா விஜயன், யோகி பாபு, ஜான் விஜய் உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். ‘மகுடம்’ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
அதில் பேசிய நடிகை அஞ்சலி, ‘எனது நெருங்கிய நண்பர் விஷால் முதல் முறையாக ஒரு படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன். தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி இன்று நம்முடன் இல்லாவிட்டாலும், இந்த படத்தின் வெற்றியால் நிச்சயம் அவர் மகிழ்ச்சி அடைவார்.
இதில் அன்னபூரணி என்ற வேடத்தில் நடித்துள்ளேன். நான் இதுவரை நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த வேடங்களின் வரிசையில் அன்னபூரணி கேரக்டர் இருக்கும். எனது தமிழ் சினிமா பயணத்தில் முதல் முறையாக இப்படத்தில் சண்டை காட்சிகளில் நடித்துள்ளேன். படத்தின் பாடல்கள் வரவேற்பை பெற்றுள்ளது. இது வெற்றி் படமாக அமைய வேண்டும் என்று விரும்புகிறேன்’ என்றார்.