×

போடு தகிட… தகிட…. பிக்கப் ஆன ‘அன்னபூரணி’ கலெக்ஷன்!

 

நயன்தாராவின் ‘அன்னபூரணி’ படம்  ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் படம் மூன்றாவது நாளில் எவ்வளவு வசூலித்துள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், ஜீ ஸ்டுடியோஸ், நாட் ஸ்டுடியோஸ் மற்றும் டிரிரெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் 75வது படம் ‘அன்னபூரணி’. இந்த படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ஜெய், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, சத்தியராஜ், கார்த்திக் குமார் ஆகியோர் நடித்துள்ளனர். படம் ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக பெண் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் முதல் இரண்டு நாட்களில் சேர்த்து  ரூ.1.5 கோடி படம் வசூலித்த நிலையில்,நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ 2.3 கோடி வசூலித்துள்ளது. நேற்று ஞாயிற்று கிழமை விடுமுறை என்பதால் படத்தில் வசூல் அதிகரித்துள்ளது.