நயன்தாராவின் 'அன்னபூரணி' ஓ.டி.டி. ரிலீஸ் இந்தியாவில் இல்லையாமே.. ?
இந்திய திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா, இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் 'அன்னபூரணி' என்ற படத்தில் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம்,மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் தயாரான இந்த படத்தில் நடிகர் ஜெய் கதாநாயகனாக நடித்துள்ளார்.இந்த படத்தில் சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்ரவர்த்தி, கே.எஸ்.ரவிகுமார், ரேணுகா, பூர்ணிமா ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜீ ஸ்டூடியோஸ், நாட் ஸ்டூடியோஸ், டிரைடன்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்த இந்த படத்துக்கு தமன் இசையமைத்துள்ளார்.இந்த படம் கடந்த வருடம் டிசம்பர் 29-ந் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியிடப்பட்டது. ஆனால், கலவையான விமர்சனங்களை பெற்ற இந்த படத்தில் சில சர்ச்சைக்குரிய கருத்துகள் இடம் பெற்றிருந்ததால், அதை ஸ்ட்ரீமிங் தளத்தில் இருந்து அகற்றிவிட்டனர்.இந்தநிலையில், தற்போது இந்த படத்தின் ஓ.டி.டி குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில், நாளை சிம்பிலி சவுத் ஓ.டி.டி தளத்தில் இந்தியாவைத் தவிர உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. ஆனால் இந்தியாவில் படம் திரையிடப்பட வேண்டும் என்றால், ஒரு நிபந்தனை உள்ளது. அதாவது, மத உணர்வுகளை புண்படுத்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை நீக்கினால் மட்டுமே இந்தியாவில் திரையிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது.