படக்குழுவின் அதிரடி அறிவிப்பு..! நாளை வெளியாகிறது தனுஷ் பட ட்ரைலர்..!
Updated: Jul 22, 2024, 21:28 IST
தனுஷ் தனது 50வது படத்தை தானே இயக்கி நடித்து வருகிறார். அந்த படத்திற்கு ராயன் என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
இந்நிலையில், படத்தின் டிரெய்லர் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் அதிகரிக்கும் வகையில் டிரெய்லர் ரிலீஸ் குறித்த அறிவிப்பை தவிர்த்து மற்ற அப்டேட்டுகளை பட்டக்குழு அவ்வப்போது வெளியிட்டு வந்தது. இந்நிலையில், வரும் ஜூலை 16ஆம் தேதி ராயன் படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக் குழுவான சன் பிக்சர்ஸ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. படத்தின் புதிய போஸ்டருடன் கூடிய டிரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளதால் தனுஷ் ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் ராயன் படத்தில் பிரகாஷ் ராஜ், வரலட்சுமி சரத்குமார், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.