×

மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி தொடர்பான வழக்கில் முன்ஜாமீன்

 

இசை புயல் ஏ.ஆர். ரஹ்மானின் நேரடி நிகழ்ச்சி சென்னையில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி நடக்க இருந்த நிலையில் மழையால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து இம்மாதம் 10ஆம் தேதி நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியை ஏசிடிசி நிறுவனம் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிலையில் நிகழ்ச்சியில் டிக்கெட் இருந்தும் உள்ளே அனுமதிக்கவில்லை, கூட்ட நெரிசல், போக்குவரத்து நெரிசல், பாலியல் சீண்டல், மூச்சு திணறல் என பலர் தாங்கள் சந்தித்த கசப்பான அனுபவங்கள் குறித்து இணையத்தில் முறையிட்டனர். தொடர்ந்து தங்களுக்கு பணம் திரும்ப வேண்டும் என்றும் கூறி இணையத்தில் பதிவிட்டு வந்தனர். தொடர்ந்து கடுமையான விமர்சனங்கள் வந்த நிலையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் ‘ஏ. ஆர் ரஹ்மானை யாரும் திட்டாதீர்கள், அவர் தனது வேலையை சிறப்பாக செய்தார். டிக்கெட்டுகான பணத்தை நாங்கள் திருப்பி கொடுத்துவிடுகிறோம்’ என கூறி வீடியோ வெளியிட்டார்.

இருப்பினும், நிகழ்ச்சியில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக ஏடிசி நிறுவனத்தின் நிறுவனர் ஹேமந்த் ராஜா மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி ஹேமந்த் ராஜா தாக்கல் செய்த மனுவை விசாரித்த, சென்னை நீதிபதிகள், அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது.