டிராகன் படத்தின் அனுபமா பரமேஸ்வரனின் ஹாட் போஸ்டர்
Oct 13, 2024, 17:50 IST
கடந்த 2020 - ஆண்டு பிப் -14 ந்தேதி இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'ஓ மை கடவுளே' காதல் நகைச்சுவை படம் வெளியாகி வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ளார். இது ஏ.ஜி.எஸ் பட நிறுவனம் தயாரிக்கும் 26 -வது படமாகும். இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்கிறார். படத்திற்கு டிராகன் என தலைப்பு வைத்துள்ளனர்.மேலும் இப்படத்தில் கே.எஸ். ரவிக்குமார், மிஷ்கின், வி.ஜே. சித்து , ஹர்ஷத் ஆகியோர் நடிக்கின்றனர். படத்தின் நடிக்கப் போகும் மற்ற நடிகர்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்காக முதல் இரண்டு போஸ்டர்களை வெளியிட்டுள்ளனர். படத்தின் மூன்றாவது போஸ்டரை தற்பொழுது படக்குழு வெளியிட்டுள்ளனர். இதில் பிரதீப் ரங்கநாதன் நடிகை அனுபமா பரமேஸ்வரனின் உதட்டை கில்லுவதுப் போல் மிகவும் ரொமாண்டிக்காக போஸ்டர் காட்சி அமைந்துள்ளது. பேக்கிரவுண்டில் கீர்த்தி மற்றும் டிராகன் என்ற பெயர்க்கு ஃப்லேம்ஸ் போடப்பட்டு இருக்கிறது . இதன் மூலம் அனுபமா பரமேஸ்வரன் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் என படக்குழு தெரிவித்துள்ளது. இப்படம் ஒரு காலேஜ் லவ் ஸ்டோரி நிறைந்த காமெடிக் கதையாக அமைந்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.