ரத்தம் தெறிக்கும் ஆக்ரோஷ லுக்கில் அனுஷ்கா ஷெட்டியின் 'காதி' கிளிம்ஸ் வீடியோ வெளியீடு
நடிகை அனுஷ்கா ஷெட்டியின் பிறந்தநாளை முன்னிட்டு 'காதி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. 'அருந்ததி' பேய் படத்தில் நடித்து பிரபலமானவர் அனுஷ்கா ஷெட்டி. இவர் ரஜினிகாந்த், விஜய், அஜித்குமார், விக்ரம், சூர்யா, மாதவன், ஆர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். அனுஷ்காவின் சினிமா வாழ்க்கையில் 'பாகுபலி' முக்கிய படமாக அமைந்தது. இவர் தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.
அதிரடி தோற்றத்தில் மிரட்டலான அனுஷ்காவை அறிமுகப்படுத்தும் இந்த போஸ்டரில், அனுஷ்கா தலை மற்றும் கைகளில் இருந்து ரத்தம் சொட்டக் காணப்படுகிறார், நெற்றியில் பொட்டு வைத்து பயங்கரமாக காட்சி அளிக்கிறார். மேலும் ஆக்ஷன் த்ரில்லராக உருவாகி உள்ள இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
இந்த வீடியோவில் அனுஷ்கா ஒருவரை கொடூரமாக கொலை செய்து தலையை கையில் எடுத்து வருகிறார். மேலும் அனுஷ்கா சுருட்டு பிடிக்கும் காட்சியும் இதில் இடம் பெற்றுள்ளது. இந்த படத்தில் அனுஷ்காவை முன் எப்போதும் இல்லாத வகையில் அதிரடி ஆக்ஷன் நாயகியாக இயக்குநர் கிரிஷ் இதில் காட்டியுள்ளார்.
இப்படத்தற்கு மனோஜ் ரெட்டி கடசானி ஒளிப்பதிவு செய்ய, நாகவெல்லி வித்யா சாகர் இசையமைத்துள்ளார். படத்திற்கு தோட்டா தரணி கலை இயக்குநராகவும், சாணக்யா ரெட்டி தூறுப்பு படத்தொகுப்பாளராகவும் பணியாற்றுகின்றனர். அதிக பட்ஜெட் மற்றும் உயர்மட்ட தொழில்நுட்ப தரத்தில் பிரமாண்டமான திரைப்படமாக காதி உருவாகிறது. காதி பான் இந்தியா திரைப்படமாக தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.