×

ஆல்பம் சேல்ஸ்: உலகின் நம்பர் ஒன் இடத்தை பிடித்த ஏ. ஆர் ரஹ்மான்.

 

உலக அளவில் ஆல்பம் பாடல்கள் விற்பனையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார் ஏ. ஆர் ரஹ்மான்.

மகிழ்ச்சி, சோகம், துக்கம், கோபம், காதல் என அனைத்து விதமான உணர்வுகளையும் வெளிப்படுத்த இசை ஒரு மிகச்சிறந்த கருவியாக உள்ளது. அதனாலேயே அனைவருக்கும் பிடித்த ஒன்றாக இசை உள்ளது. இந்தியாவை பொறுத்தவரை பல இசையமைப்பாளர்கள் இருந்தாலும் ஏ.ஆர் ரஹ்மானுக்கு எப்போதும் தனி இடம் உண்டு, ஆஸ்கார் நாயகன், இசைப்புயல் என அழைக்கப்படும் இவர் தற்போது நிகழ்த்தியுள்ள சாதனை இந்தியாவை உலக அளவில் தலைநிமிர செய்துள்ளது.

அதாவது, ஏ.ஆர் ரஹ்மானின் ஆல்பம் பாடல்கள் உலக அளவில் அதிக அளவில் விற்பனையாகியுள்ளது. கிட்டத்தட்ட ரூ. 1976 கோடிக்கு 200 மில்லியனுக்கும் மேற்பட்ட ஆல்பம் பாடல்கள்  விற்பனையாகியுள்ளது. இரண்டாவது இடத்தில், போனோ ஆல்பம் பாடல்கள் 150 மில்லியனுடன் இரண்டாவது இடத்திலும், மைக்கல் ஜாக்சன் பாடல்கள் 89 மில்லியனுடன் மூன்றாவது இடத்திலும், டைய்லர் ஷிப்ட் ஆல்பம் பாடல்கள் 75 மில்லியனுடன் நான்காவது இடத்தில் உள்ளது. மடோனா பாடல்கள் 64.5 மில்லியனுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளது.