70 கோடி பார்வைகளை கடந்த 'அரபிக் குத்து' பாடல்
பீஸ்ட் படத்தில் இடம்பெற்றுள்ள 'அரபிக் குத்து' பாடல் இணையத்தில் 70 கோடி பார்வைகளை கடந்துள்ளது.
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி கடந்த 2022 ஆம் ஆண்டு பீஸ்ட் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் செல்வராகவன், ஷான் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து இருந்தது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே மிகப்பெரிய ஹிட்டானது. அதிலும் குறிப்பாக அரபி குத்து பாடல் உலகமெங்கும் உள்ள மக்களால் கொண்டாடப்பட்டது. இப்பாடலில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே இணைந்து நடனம் ஆடுவது மிகவும் அட்டகாசமாக இருக்கும். இப்பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் வரிகளில் அனிருத் மற்றும் ஜொனிடா காந்தி இணைந்து பாடினர்.