×

‘தளபதி 68’ பட டைட்டில் அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர் ‘அர்ச்சனா கல்பாத்தி’!...

 

தளபதி விஜய்யின் 68வது படமாக தயாராகிவரும் படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த நிலையில் படத்தின் டைட்டில் குறித்த செய்தி தான் சில பல நாட்களாக இணையத்தை வட்டமடித்து வருகிறது. தற்போது அதற்கான பதிவு ஒன்றை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தளபதி விஜய்யுடன் இணைந்து, மீனாட்சி சவுத்ரி, சினேகா,மோகன், பிரசாந்த், பிரபுதேவா, லைலா, பிரேம்ஜி ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாகவும் அதில் ஒன்று இளமைகால விஜய் என்றும் தகவல்கள் வெளியானது இதனை தொடர்ந்து படப்பிடிப்பு ஐதராபாத்தில் படு ஜோராக நடந்து வருகிறது. இந்த நிலையில் படத்திற்கு மூன்ரு தலைப்புகள் தேர்வாகியுள்ளதாகவும் அவை, பசில் மற்றும் பாஸ் என்றும் தகவல் பரவியது.

இது குறித்து பதிலளித்துள்ள அர்ச்சனா” இப்போதுதான் எல்ல அப்டேட்டையும் பார்த்தேன், அமைதியாக பொறுமையாக இருங்கள். இயக்குநர் வெங்கட் பிரபு நமக்காக ரொம்ப ஸ்பெஷலாக ஒன்றை தயார் செய்கிறார். கண்டிப்பாக அது பாஸும் இல்லை பசிலும் இல்லை” என பதிவிட்டுள்ளார்.