ஆர் யூ ஓகே பேபி முன்னோட்டம் வெளியானது
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஆர் யூ ஓகே பேபி திரைப்படத்தின் முன்னோட்டம் வௌியாகியுள்ளது.
லட்சுமி ராமகிருஷ்ணன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு, தனியார் தொலைக்காட்சியில் சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அந்நிகழ்ச்சியில் அவர் சந்தித்த உண்மை சம்பவத்தை தழுவி ஆர் யூ ஓகே பேபி திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். ஒரு குழந்தைக்காக இரண்டு தாய்மார்கள் உரிமை கோரும் கதையை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது இந்த படத்தில் நடிகை அபிராமி, சமுத்திரகனி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இத்திரைப்படம் வரும் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.