நடிகர் ஜீவாவிற்கும் பத்திரிகையாளருக்கும் வாக்குவாதம் - என்ன நடந்தது?
தேனியில் துணிக்கடை திறப்பு விழாவிற்கு வருகை தந்த நடிகர் ஜீவாவிற்கும் பத்திரிகையாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.
தேனி மதுரை சாலையில் உள்ள தனியார் ஜவுளிக்கடை திறப்பு விழாவில் நடிகர் ஜீவா கலந்து கொண்டார். அப்போது அவரிடம் கேரள திரையுலக பாலியல் சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நடிகர் ஜீவா, கேரளவைப் போல தமிழ் திரையுலகில் பாலியல் சர்ச்சை இல்லை எனவும், அந்த கேள்விக்கு ஏற்கனவே பதிலளித்து இருப்பதால் நல்ல நிகழ்வில் மீண்டும், மீண்டும் அது குறித்து கேட்க வேண்டாம் எனக் கூறி சென்றார். அப்போது ஒரு குறிப்பிட்ட செய்தியாளரை பார்த்து இது போன்ற கேள்வியை எந்த இடத்தில் கேட்க வேண்டும் என்ற அறிவு இருக்கிறதா என ஆவேசமாக பேசியதால், அவருக்கும் ஜீவாவிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அந்த இடத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.