அர்ஜுன் நடிக்கும் "பங்"-படத்தின் இயக்குனர் யார் தெரியுமா ?
Nov 14, 2026, 06:00 IST
டிஎஸ்ஆர் பிலிம்ஸ் மொபின் புரொடக்ஷன், சமீர் புரொடக்ஷன்ஸ் வழங்கும் படம் ‘பங்’. எம்.டி. சலார் பெயிக் தயாரிக்கிறார். எழுத்து, இயக்கம் எஸ்.எஸ். சமீர். அர்ஜுன், குட்டி ராதிகா, அர்ச்சனா கெளதம், சோனி சிரிஸ்ட்டா, ஜே.டி. சக்கரவர்த்தி, ராம், ஜெகன், கே விஸ்வநாத், சமீர், அசோக் குமார், அபித்பூஷன் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு - அமீர்லால். இசை - சுபாஷ் பின்னணி இசை - சைமன் கே. கிங்.
இப்படத்தை பற்றி இயக்குனர் சமீர் கூறியது:
ஒரு லட்சம் கோடி பணத்தை ஹனி டிராப் மூலம் வில்லன் ஜேடி சக்கரவர்த்தி கொள்ளையடிக்க முயற்சிக்க அந்தத் திட்டத்தை ஹீரோ அர்ஜுன் முறியடிக்கும் அதிரடி ஆக்சன் களமாக படம் உருவாகியுள்ளது. பிரமாண்ட செலவில் மும்பை, பெங்களூரு முதலிய நகரங்களிலும் பாங்காங்கிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. விரைவில் படம் வெளியாக உள்ளது என்றார்.