‘ஜான் டோ’ படத்தில் அர்ஜுன் தாஸ் -என்ன வேடத்தில் நடிக்கிறார் தெரியுமா ?
அர்ஜுன் தாஸ் முதன்முறையாக காவல் அதிகாரியாக நடிக்கும் படம் ‘ஜான் டோ’. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘பாகுபலி’ போன்ற பிரமாண்ட படத்தை தயாரித்த ஆர்கா மீடியா ஒர்க்ஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. ‘கே.டி. (எ) கருப்புதுரை’, இந்தியில் அபிஷேக் பச்சன் நடித்த ‘காலிதார் லாபட்டா’ ஆகிய படங்களை இயக்கிய மதுமிதா ‘ஜான் டோ’ படத்தை இயக்கியுள்ளார். மேலும், சஞ்சனா நடராஜன், சிருஷ்டி, ஜாரா வினீத் சாந்தோக், நீரவ் உள்பட பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
பிரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்ய, முஜீப் மஜீத் இசை அமைத்துள்ளார். ஜான் டோ என்பவர் யார்? அவர் பாதிக்கப்பட்டவரா, குற்றவாளியா, காணாமல் போன குழந்தையா அல்லது இதுவரை கண்டுபிடிக்கப்படாத ஒருவரா போன்ற பல கேள்விகளுக்கான பதிலை தேடிப் பயணிக்கும் சந்துரு என்ற காவல் அதிகாரியின் தேடல்தான் ‘ஜான் டோ’ படத்தின் கதை.