அர்ஜுன் தாஸுடன் இணையும் அதிதி ஷங்கர்
Updated: Jul 11, 2024, 11:39 IST
குட் நைட், லவ்வர் என தமிழ் திரையுலகில் கொண்டாடப்பட வேண்டிய திரைப்படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தனது அடுத்த தயாரிப்பில் களம் இறங்கியுள்ளது. நடிகர் அர்ஜுன் தாஸ், நடிகை அதிதி சங்கர் நடிக்கும் புதிய படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோ தயாரிக்கிறது.
இப்படத்தை இயக்குனர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கும் நிலையில், ஹெஷாம் அப்துல் வஹாப் படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்திற்கு தற்காலிகமாக புரொடக்ஷன் நம்பர் 4 என பெயரிடப்பட்டுள்ளது இப்படம் குறித்த முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .