அர்ஜூன் தாஸின் ரசவாதி டீசர் ரிலீஸ்
நடிகர் அர்ஜுன் தாஸ் தற்போது தமிழில் வளர்ந்து வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர். கைதி படத்தின் மூலம் அனைவரின் கவனம் ஈர்த்த அர்ஜுன் தாஸ் அந்தகாரம் மற்றும் மாஸ்டர் படத்தின் மூலம் நம்பிக்கைக்குரிய நடிகர்கள் பட்டியலில் இணைந்தார். இதையடுத்து, அந்தகாரம் படத்தில் நாயகனாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து வசந்த பாலன் இயக்கிய அநீதி படத்தில் அவர் கதாநாயகனாக நடித்திருந்தார். மௌனகுரு, மகாமுனி படங்களை இயக்கி தமிழ் திரை உலகில் கவனம் பெற்றவர் இயக்குநர் சாந்தகுமார். இவர் இயக்கவுல்ள மூன்றாவது படத்தில் அர்ஜன் தாஸ் நாயகனாக நடிக்கிறார். தான்யா ரவிச்சந்திரன் கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தை டிஎம்ஏ மெக்கானிக் கம்பெனி தயாரிக்கிறது. படத்திற்கு ரசாவதி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்று வருகிறது.