×

'அருள் நிதி'யின் ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு.

 

‘ராட்சசி’ திரைப்படத்தை இயக்கிய சை. கவுதமராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள திரைப்படம் ‘கழுவேத்தி மூர்க்கன்’. இந்த படத்தின் மோஷன் போஸ்டரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளனர்.

 அருள் நிதி கதாநாயகனாக நடிக்கும் கழுவேத்தி மூர்க்கன் திரைப்படத்தில், துஷாரா விஜயன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் இனைந்து சாயா தேவி, சந்தோஷ் பிரதாப், முனீஷ்காந்த், சரத்லோகிதாஸ்வா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். டி. இமான் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு தயாரான இந்த படம் ராமநாதபுரம், ராமேஸ்வரம், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

 

ராமநாதபுரத்தில் உள்ள கழுமரங்களை மைய்யமாக கொண்டு ஆக்ஷம் கலந்த கமர்ஷியல் படமாக தயாரான இந்த படத்தின் மோஷன் போஸ்டரில் அருள் நிதி முறுக்கு மீசையுடன் கைய்யில் அரிவாளுடன் மாஸ்ஸாக நடந்து வருகிறார்.  தொடர்ந்து படம் குறித்த அடுத்தடுத்த அறிவிப்புகளை எதிர்பார்க்கலாம்.

<a href=https://youtube.com/embed/GbDNcrXX7dY?autoplay=1&mute=1><img src=https://img.youtube.com/vi/GbDNcrXX7dY/hqdefault.jpg alt=""><span><div class="youtube_play"></div></span></a>" style="border: 0px; overflow: hidden"" title="Kazhuvethi Moorkkan - Motion Poster | Arulnithi | D Imman | SY Gowthama Raj | Olympia Movies" width="640">